Monday, January 26, 2015

உதகையில் ஒரு அதிர்ச்சி பயணம்



இரண்டு பத்திரிக்கைத்துறை நண்பர்களுடன் சமீபத்தில் உதகை வரை சுற்றுலா சென்றிருந்தேன். சென்னையில் இருந்து காரில் சென்றோம்.
எங்கள் பயணத்தின் இரண்டாம் நாள் கத்ரீன் அருவியை தேடி சென்று கொண்டிருந்தோம், வழி கேட்டு கேட்டு ஒரு வழியாக  அந்த இடத்தை அடைந்தோம் ஆனால் பிறகுதான் தெரியும் அது அருவி கொட்டும் இடம் இல்லை வியூவ் பாயிண்ட் எனப்படும் தொலைவில் இருந்து அருவியை ரசிக்கும் இடம் என்று. அருவியில் ஒரு கும்மாள குளியல் போடலாம் என்று நினைத்தால் என்னடா இப்படி ஆகி விட்டது என்று யோசித்து கொண்டிருக்கையில் ஊரில் ஒரு பெரியவர் பக்கத்தில் மாசி காடு என்ற ஒரு இடம் இருப்பதாகவும், அங்கு இந்த அருவியின் நீரோட்டம் இருப்பதாகவும் அந்த இடம் அழகாக இருக்கும் என்றும் கூறினார். நாங்கள் நால்வருமே புகைப்பட பைத்தியங்கள் ஆகையால் எப்படியும் அங்கு சென்று பார்த்து விட்டு நல்ல இயற்கை புகைப்படங்களை எடுத்து வரலாம் என்று அந்த இடத்தை தேடி புறப்பட்டோம்.  எங்களுக்கு சொல்லபட்டிருந்தது அறைவேணு என்ற ஊரில் இருந்து 2 கீ மீ தூரத்தில் உள்ளது என்று மட்டுமே!




மெதுவாக காரை செலுத்தி போய்  கொண்டிருக்கையில் பெட்ரோல் தேவைப்பட்டது, காருக்கு அல்ல எங்களுக்குதான் அருகில் ஒரு டீ கடையில் வண்டியை நிறுத்தினோம், அங்கு என நடந்தது என்பதை சொலவே இவ்வளவு பீடிகை.. நாங்கள் உள்ளே அமர்ந்து தேனீர் அருந்தி கொண்டிருக்கையில் ஒரு சிறுவன் உள்ளே ஓடி வந்து மொபைலில் எதோ டவுன்லோட் ஆகி கொண்டிருப்பதாகவும் பார்த்து வைக்கும்படியும் அந்த டீ கடைக்காரரை கேட்டு கொண்டான் கூடவே தனக்கு ஹான்ஸ் ( chewing tobacco) வேண்டும் என்றான்.

அப்பொழுதுதான் அந்த சிறுவனை  கவனித்தேன் 13 ல் இருந்து 14 நான்கு வயதிருக்கலாம்(பின்னால் அவனிடமே விசாரித்து உறுதிபடுத்தி கொண்டோம்) சென்னையில் பிறந்து வளர்ந்ததால் நான் பலமுறை இது போன்ற சிறுவர்களை பார்த்திருகின்றேன் இருந்தாலும் இந்த சிறுவனை பற்றி அந்த கடை காரரிடம் விசாரித்தேன், அவர் சொன்ன ஒவ்வொன்றும் சிறிது அல்ல பெரிய அதிர்ச்சியை அளித்தது. என்ன இவன் ஹான்ஸ் வாங்கிட்டு போறான்னு கேட்டேன் நீங்க வேறங்க அவன் டெய்லி சரக்கடிப்பான் இதெல்லாம் ஒரு மேட்டரா கேட்டாரு, நாங்க அண்ணா காமெடி பண்ணாதீங்க உண்மைய  சொல்லுங்கன்னு கேட்டேன்.. அவர் நீங்க வேற தம்பி பொய் சொல்லி எனகென்ன அக போகுது வேணும்னா அவனையே கேளுங்கன்னு அவன கூப்பிட்டாரு, தம்பி என்னடா சரக்கு எல்லாம் அடிப்பியாமே சொல்லவே இல்லன்னு பேச்சு குடுத்தேன், முதலில் தயங்கினாலும் பின்பு மட மட வென அவனை பற்றி சொல்ல ஆரம்பித்தான். 6ம் வகுப்பில் படிப்பை நிறுத்தி கொண்டதாகவும், தற்போது ஒரு லாரியில் கிளீனர் வேலை செய்வதாகவும் சொன்னான், தினமும் ஒரு குவார்டரில் இருந்து ஹாப் பிராண்டி சாப்பிடுவேன் என்றும் கூறினான்,அப்போ ஹான்ஸ் யாருக்குடா என்றால் எனக்குதான் என்று சிரித்து கொண்டே சொல்லி விட்டு சென்றான், அதிர்ச்சியில் இருந்து மீளாமல், இவங்க அம்மா அப்பா என்ன பண்றாங்க அண்ணா என்று தொடர்ந்தேன்,



அவர் அவங்க பக்கத்துல இருக்க  எஸ்டேட்ல வேலை பாக்குறாங்க இந்த புள்ளைய கெடுத்ததே அவங்கதானும் சொன்னார், இவங்க அந்த சின்ன புள்ளைய வச்சுக்கிட்டே ரெண்டு பெரும் குடிப்பாங்க, கொழந்தை கேக்குதுன்னு அதுக்கும் கொஞ்சம் ஊட்டி வளத்துடாங்க, அம்மா அப்பா ரெண்டு பேரும் வேளைக்கு போகும்போது இவன் ஏன்  படிக்கலன்னு கேட்டேன், அப்போதான் தெரிந்தது இவன் படிப்பை விடல பள்ளிய விட்டு இவன அனுப்பிட்டாங்கனு, 6வது படிக்கும்போது வகுப்பிற்கே ஹான்ஸ் எடுத்து சென்று மென்று துப்பியுள்ளான், பார்த்த ஆசிரியர் காதோடு சேர்த்து அடித்து அனுப்பி விட்டார். இந்த ஏரியா வைன் ஷாப் க்கு டெய்லி படி அளக்கிறதே இவன்தான் சார் என்றார், இந்த சைஸ்ல இருக்க பையனக்கு யாருனே சரக்கு குடுப்பானு  கேட்டேன், அதற்கு அவர் இவன் போன தரமாட்டாங்க அதனால அதுக்கும் ஒரு புரோக்கர் வச்சுருகான் 10 ரூபா கமிசன் ஒரு குவார்ட்டருக்கு என்றார், இவன் மட்டும் இல்லை  சார் இங்க நிறைய பசங்க சின்ன வயசுல இருந்தே கெட்டு போய்டுறாங்கன்னும் சொன்னார்.  என்னதான் வாய் பேசி கொண்டே இருந்தாலும் மனசு என்னவோ செய்தது அமைதியாக எழுந்து பயணத்தை தொடர்ந்தோம்,

இது தவறா சரியா? அப்படியே இருந்தாலும் அந்த சிறுவனின் பெற்றோர் செய்த தவறா அரசாங்கத்தின் தவறா இல்லை அந்த சிறுவனின் தவறா! ஆண்டவனின் தவறா! தெரியவில்லை!

நெடு நேரம் எங்கள் நால்வர் இடையே அமைதியும் சிந்தனையும் சேர்ந்தே பயணம் செய்தது!


சாமானியன் மனோஜ்


No comments:

Post a Comment