Friday, February 11, 2011

For fun

அழகான முன்னிரவு நேரம்!
கூடு திரும்பும் பறவைகளின் கொஞ்சல் ஓசை!
உடலை ஊடுருவி செல்லும் தென்றல்!
காதல் சொல்லி காயும்  நிலவு!
நானும் அவளும் தனிமையில்!
அவள் கை பிடித்து முகம் பார்த்து!
உன்னை காணும்போது!
என் மூளைக்குள் பூ பூக்கிறது என்றேன்!
அவள்...
என்னை நெருங்கி!
கண்களை நோக்கி!
காதலுடன்!
.
.
.
.
.
.
.
.போடா "மரமண்டை" என்றால்! ;)

Saturday, December 18, 2010

வலி

ரோஜா பறித்தேன்!
முட்குத்தி வலித்தது!
அவள் வாங்க மறுத்தபோது.......

ஈரம்

உன்னை பிரிந்து வாடும்போது!


குளித்து முடித்து பல மணி நேரம் கழித்தும்!

ஈரம் மட்டும் காயவில்லை!

கண்களில்...................

Friday, December 17, 2010

சூரியனாய் நான்

இரு நாட்கள் கண்விழித்து!
அயர்ந்து சோர்ந்த விழிகள்கூட!
காலை சூரியனாய் ஒளிர்கின்றது!
கண்ணே உன் பூ முகம் பார்க்கும் தருணம்!
முதல் முதலாய் பூவுக்காக ஒளிரும் சூரியனாய் நான்..... !

Wednesday, December 15, 2010

un peyar

தீடிரென்று! ஒரு கவிதை சொல் என்றாள்!
முடியவில்லை!
எவ்வளவு முயன்றும் உன் பெயர் மட்டுமே நினைவில் வருவதால்!

Monday, June 21, 2010

என் கவிதை புத்தகம்

பிரசுரம் ஆனது ஒரே நேரத்தில்!
வெளி வந்ததும் ஒரே நேரத்தில்!

என் கவிதை புத்தகம்!

அவள் கல்யாண அழைப்பிதழும் கூட!